அந்த அரசனுக்கு தீடிர் ஆசை..
பழச்சுவையின் மீது தீடிர் மோகம்..
தான் சுவைக்காத அரிய பழத்தை கொண்டு வந்தால் ஆயிரம் பவுன் பரிசு..
மக்கள் முன் அறிவித்தான்..
மக்கள் தங்களுக்கு கிடைத்த பழங்களை எடுத்து கொண்டு வரிசையில் நின்றனர்..
ஆனால் அதில் ”கண்டிஷன் அப்ளை” இருந்தது..
இம்சை அரசர்களும் உண்டல்லாவா..
அரசருக்கு தெரிந்த பழமாக இருந்தால் அவர் வாயிலே திணித்து அனுப்பிவைக்கப் படுவாகள்..
ஒருவன்அன்னாசி எடுத்து வந்தான்…அது அரசனுக்கு தெரிந்த பழாமாய் இருந்த்தால் வாயில் திணித்து அனுப்ப வீரர்களுக்கு உத்திரவிடப்பட்டது..
அவன்சிரிக்க ஆரம்பித்தான்
வீரர்களுக்கு புரியவில்லை..”ஏன் சிரிக்கிறாய்” என்றார்கள்..
”பின்னாடி ஒருவன் பலா பழத்தை தூக்கிவருகிறான்..அவனுக்கு எற்ப்படும் கதியை நினைத்து சிரித்தேன்”
என்றான் அவன்
நீதி… இங்கே மனிதர்களுக்கு அடுத்தவன் துன்பபடுவதை பார்த்தால் எந்தநிலையிலும் சிரிப்பு வரும்..