கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் சூர்ய குமார் யாதவ் தான். இந்த அணி மோதிய இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், இலக்கை எளிதாக உதவியது சூர்ய குமார்தான். 5 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 20 பந்துகளில் 46 ரன்களை அதிரடியாக சேர்த்து வெற்றிக்கு உதவினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பேட்டிங்கில் 4 வது ஆளாக களம் இறங்குகிறார்.
இவரது பெற்றோர்கள் இவரது கிரிக்கேட் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர் சூர்ய குமாரும் தனது பெற்றோர்கள் மீது மிகுந்த அன்பு வைத்து உள்ளார்.
யாதவ் ஒரு நடுத்தரமான குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். ஆடம்பரமான கார்களும், பைக்குகளும் தற்போதுதான் வந்துள்ளன. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவரது தந்தை அசோக்குமார் யாதவ் பணி நிமித்தம் காரணமாக கடந்த 1989ம் ஆண்டு மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திற்கு இடமாற்றப்பட்டார். அதன் பின் இவரது குடும்பம் மும்பையில் குடியேறியது. கிரிக்கெட் இல்லாமல் சூர்யாவால் வாழ முடியாது. என வர தந்தி கூறி உள்ளார்.
அசோக்-சப்னா தம்பதியர்க்கு சூர்யா ஒரே மகன் ஆவார். சூர்யா தனது பெற்றோருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர்களது உருவங்களை தனது வலது கையில் பச்சை குத்தி உள்ளார்.முதலில் அவர தனது வலது கையில் தனது பெற்றோர்களின் பெயரை தான் பச்சை குத்தி இருந்தார்.
இது குறித்து சூர்ய குமார் கூறியதாவது;-
நான் கொல்கத்தா நைட் ரைடர் அணிக்கு தேர்வானதும் எனது தந்தை மற்றும் தாயார் பெயரை பதிவு செய்தேன்.ஒரு பக்கத்தில் இருந்து படித்தால் அசோக் மற்றொரு பக்கத்தில் இருந்து படித்தால் சப்னா என தெரியும் என கூறினார். முதல் போட்டியிலேயே நான் பச்சை குத்தி விட்டேன். நான் எனது பெற்றோரை நினைவு கூர்ந்து கொள்ள பச்சை குத்தி உள்ளேன் எனது கை எங்களது வெற்றியை எதிர்கொள்கிறது.என்று கூறினார்.