தமிழகத்தில் பேய் படங்கள் நன்றாக ஓடி வசூல் குவிக்கின்றன. சமீபத்தில் ரிலீசான காஞ்சனா-2 படம் முன்னணி நடிகர்கள் படங்களின் வசூலை முறியடித்து சக்கை போடுகிறது.
இதையடுத்து பேய் படங்கள் எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே அரண்மனை, என்ற பேய் படத்தை சுந்தர்.சி. இயக்கி வெளியிட்டார்.
அந்த படமும் வசூலை அள்ளியது. அதில் லட்சுமி ராய், ஹன்சிகா, ஆண்டரியா ஆகிய மூன்று நாயகிகள் இணைந்து நடித்து இருந்தனர். தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி. ஈடுபட்டு உள்ளார்.
இந்த படத்தில் நடிக்க திரிஷா ஒப்பந்தம் ஆகி உள்ளார். பேய் படத்தில் திரிஷா நடிப்பது இதுவே முதல்முறையாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் நடிக்க ஹன்சிகாவும் ஒப்பந்தமாகி உள்லார்
இது குறித்து ஹன்சிகா தனது டுவிட்டரில் குறிபிட்டு உள்ளார்.
மீண்டும் அரண்மணை திரும்பி உள்ளது.உங்களுக்கும் எனக்கும் பிடித்த சுந்தர் சியுடன் 4 வது முறையாக கை கோர்க்கிறேன் அரண்மணை 2 -ல்
என ஹன்சிகா தனது டுவிட்டரில் குறிபிட்டு உள்ளார்.
அரண்மனை 2-ம் பாகம் படத்தில் திரிஷா நடிப்பதை சுந்தர்.சி. உறுதிபடுத்தி அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.
இதற்காக டுவிட்டரில் சுந்தர்.சிக்கு திரிஷா நன்றி தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் நடிக்கிறார்.