உடல் சோர்வு உள்ளவர்கள், வயதானவர்கள் இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். இப்போது இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பிருத்வி என்றால் சமஸ்கிருதத்தில் பூமி மாதா என்பதாகும்.
செய்முறை :
விரிப்பில் அமர்ந்து கொண்டோ நாற்காலியில் அமர்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம். இடதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். தினமும் காலை, மாலை மூன்றரை நிமிடம் செய்யவும்.
பலன்கள் :
எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும். உடல் பலவீனமற்றவருக்கு நிறையைக் கூட்டும்.
தோலின் கட்டமைப்பை உகந்ததாக்கி தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் உடலினைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
வயதானவர்களுக்கு மிகுந்த பயன். நகம் எழும்பு, முடி வளரும். உடல் நடுக்கம் குறையும்.