புளோரிடா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது 1822-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் தலகாசீ தலைநகரமாகவும், ஜாக்சன்வில் பெரிய நகரமாகவும், மயாமி பெரிய பெருநகர்ப் பகுதியாகவும் இருக்கின்றன.
ஐக்கிய அமெரிக்காவில் 27-வது மாநிலமாக 1845-ல் இணைந்தது. இது ஈரலிப்பான அயன அயல் மண்டல காலநிலை உடையது. இந்த மாநிலமே ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களில், 8-வது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும்.