மசூதிகளில் அதிகாலை ஓதப்படும் தொழுகை பாடல்களால் தூக்கம் கெடுவதாக சோனு நிகம் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையிசைப் பாடகர் சோனு நிகம். இவர், தனது ட்விட்டர் பக்கத்தில், மசூதிகளில் அதிகாலை ஒலிப்பெருக்கிகளில் ஓதப்படும் தொழுகைப் பாடல்கள் தனது தூக்கத்தை கெடுப்பதாக பதிவிட்டுள்ளார். இதுபோன்ற மதவழிபாடுகள் திணிக்கப்படுவது எப்போது நிறுத்தப்படும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நபிகள் தோன்றிய காலத்தில் மின்சாரமே இருக்கவில்லை எனவும் கோயில்களிலும் குருத்வாராக்களிலும் இதுபோன்று சத்தங்கள் எழுப்பி யாரையும் தொந்தரவு செய்வதில்லை என சோனு நிகம் கூறியுள்ளார். இதையடுத்து, சோனு நிகத்தின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.