பொதுவாக அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் Swipe Card கொடுப்பது வழக்கம் தான்.
ஆனால் சுவீடனை சேர்ந்த Epicenter என்னும் நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் 150 பேருக்கு மைக்ரோசிப் ஒன்றை வழங்கியுள்ளது.
ஊழியர்களின் கைக்குள் பொருத்தப்பட்ட சிறிய அரிசி அளவுள்ள இந்த சிப்பை கொண்டு ஊழியர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும்.
கண்காணிப்பு கமெராக்களை விட துல்லியமாக கண்காணித்தாலும், தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் எதிர்காலத்தில் அனைத்து இடங்களிலும் இந்த தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படும் என உறுதியுடன் கூறுகிறார் Epicenter நிறுவனர்களில் ஒருவரான பாட்ரிக் மெஸ்டர்டன்.