Cinema

தவிடு பொடியான நயன்தாராவின் ‘வி.பி.’ சென்டிமென்ட்

சென்னை: நயன்தாரா இத்தனை நாட்களாக நம்பிய சென்டிமென்ட் தவிடு பொடியாகியுள்ளது.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கொஞ்சம் கூட கிளாமரே இல்லாமல் நடித்த படம் அறம். முதல் நாள் படம் சரியாக வசூல் செய்யவில்லை. படத்தை பார்த்துவிட்டு வந்தவர்கள் சமூக வலைதளங்களில் ஆஹோ, ஓஹோ என்று புகழ்ந்தனர்.

இதையடுத்து 2வது நாள் படத்தின் வசூல் பிக்கப்பாகி சூப்பராக சென்று கொண்டிருக்கிறது.

சுட்டது

விஜய் நடித்த கத்தி படத்தின் கதை தன்னுடையது என்றவர் கோபி நயினார். அறம் படத்தை பார்த்தவர்கள் அது உண்மை தான் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

சென்டிமென்ட்

படங்களில் நடிப்பதோடு சரி, விளம்பர நிகழ்ச்சிகள் பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார் நயன்தாரா. கேட்டால் நான் விளம்பரம் செய்தால் அந்த படம் ஊத்திக் கொள்ளும் என்ற சென்டிமென்ட்(விளம்பரம் செய்தால் பிளாப், அதாவது வி.பி. சென்டிமென்ட்) உள்ளது என்றார்.

விளம்பரம்

தனது சென்டிமென்ட்டை மூட்டை கட்டி வைத்துவிட்டு அறம் படத்தை விளம்பரம் செய்தார் நயன்தாரா. நயன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது திரையுலகினரை வியக்க வைத்தது.

முடியாது

நயன் விளம்பரம் செய்தும் அறம் ஹிட்டாகியுள்ளது. அதனால் நான் விளம்பரம் செய்தால் படம் ஊத்திக் கொள்ளும் என்று நயன்தாராவால் இனியும் கூற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.