புதுடெல்லி:
கார்டா ஜிபிஎஸ் (Karta Gps) எனும் செயலி ஸ்மார்ட்போன்களில் மேப்ஸ் சேவையை வழங்கி வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இங்குதளங்களில் கிடைக்கும் இந்த செயலியில் மற்ற செயலிகளை போன்றே பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
இத்துடன் ஆஃப்லைன் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால் இண்ட்ரெநட் இணைப்பு இல்லாத நேரங்களிலும் செயலியை இயக்க முடியும். முற்றிலும் இலவசமாக கிடைக்கும் கார்டா ஜி.பி.எஸ். செயலியில் ஆஃப்லைன் வசதியை போன்றே பல்வேறு இதர வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கார்டா ஜி.பி.எஸ். செயலியில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதி அனைவருக்கும் பிடிக்கும். தெரியாத இடங்களை தேடும் போது, குரல் மூலம் வழியை சொல்லும் வசதி மற்ற செயலிகளில் சில காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
எனினும் கார்டா ஜி.பி.எஸ். செயலியில் இதே அம்சம் வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது. மற்ற செயலிகளில் கணினியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள குரல் நமக்கு வழியை சொல்லும், ஆனால் கார்டா ஜி.பி.எஸ். செயலியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நமக்கு வழியை சொல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி கார்டா ஜி.பி.எஸ். செயலியில் புதிதாய் சேர்க்கப்பட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் குரலில் நமக்கு தெரியாத வழியை அறிந்து கொள்ளும் வசதி பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும் என்றே சொல்லலாம்.
கார்டா ஜி.பி.எஸ். செயலியில் டொனால்டு டிரம்ப் வழியை சொல்வதை வீடியோவாக காணலாம்..,