Business

2016 அதிக ஊதியம் பெற்ற டெக் நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் சுந்தர் பிச்சை பிடித்த இடம்?

புதுடெல்லி:
உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு வழங்கிய ஊதியம் சார்ந்த விரிவான பட்டியலை புளூம்பெர்க் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவில் அதிக ஊதியம் பெற்ற 200 அதிகாரிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது.
பட்டியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்தில் பதிவு செய்த வர்த்தக அறிக்கையை தழுவி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு (2016) அதிக வருமானம் பெற்ற டாப் 5 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
டாப் 5: ஐ.பி.எம் தலைமை செயல் அதிகாரி:
ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விர்ஜினியா எம் ரொமேட்டி மொத்த வருவாய் 96,764,750 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.623,73,10,637.88 ஆகும்.
டாப் 4: டெஸ்லா தலைமை செயல் அதிகாரி:
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் 99,744,920 அமெரிக்க டாலர்கள் பெற்றுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.642,94,07,925.82 ஆகும்.
டாப் 3: கூகுள் தலைமை செயல் அதிகாரி:
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கடந்த ஆண்டு 106,502,419 அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துள்ளார். இந்திய மதிப்பில் ரூ.686,49,86,175.11 ஆகும்.
டாப் 2: ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி:
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் கடந்த ஆண்டு 150,036,907 அமெரிக்க டாலர்கள் ஊதியமாக பெற்றுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.9671,153,969.86 ஆகும்.
 
டாப் 1: வால்மார்ட் இகாமர்ஸ் தலைமை செயல் அதிகாரி
வால்மார்ட் இகாமர்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரியான மார்க் லோர் கடந்த ஆண்டு மட்டும் 236,896,191 அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.1526,99,73,127.57 ஆகும்.