Business

ஏர்டெல் இண்டர்நெட் டிவி: யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பல சேவைகள் இனி உங்கள் டிவியில்..

புதுடெல்லி:
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய இண்டர்நெட் டிவி சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சாதனம் கொண்டு உங்கள் ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் உதவியோடு பல்வேறு இண்டர்நெட் சேவைகளை பெற முடியும். புதிய சாதனத்தை வாங்குவோருக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக கிடைக்கும் ஏர்டெல் இண்டர்நெட் டிவியுடன் மூன்று மாதங்களுக்கு இலவச ஏர்டெல் டிடிஎச் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் இண்டர்நெட் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப அதிகபட்சம்  25 ஜிபி வரையிலான இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
இதே போல் குறுகிய கால சலுகையாக ரூ.7,999 செலுத்தினால் 1 வருடத்திற்கான அனைத்து எச்டி மற்றும் எஸ்டி சேனல்களை
பாரக்க முடியும். இத்துடன் இரோஸ் சேவையை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கவும், நெட்ஃப்ளிக்ஸ் முதல் மாத சேவையை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கேம்களையும் வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
எல்ஜி நிறுவனம் தயாரித்த ஏர்டெல் இண்டர்நெட் டிவியுடன் கூகுள் குரோம்காஸ்ட் சான்று பெற்றிருக்கிறது. ஏர்டெல் இண்டர்நெட் டிவியில் வை-பை, ப்ளூடூத் உள்ளிட்ட ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் இண்டர்நெட் டிவியின் இந்திய விலை ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏர்டெல் STB இந்தியாவின் முதல் 4K-வசதி கொண்டுள்ளது, இதனால் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். STB-யானது டூயல் கோர் ARM B15 பிராசஸர், 2 ஜிபி ரேம், 4K வீடியோ மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்த வரை டால்பி அட்மாஸ் வசதி, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் எச்டிஎம்ஐ 2.0 போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை கொண்டு 500+க்கும் அதிகமான டிவி சேனல்கள், ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட நெட்ஃப்ளிக்ஸ் செயலி, கூகுள் பிளே ஸ்டோர் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் செயலிகள் மற்றும் கேம்களை டவுன்லோடு செய்யலாம், இத்துடன் STB-யுடன் ஏர்டெல் மூவிஸ் செயலியும், புகைப்படம், வீடியோ அல்லது கேம்களை ஸ்மார்ட்போன் மூலம் பெரிய திரையில் காஸ்ட் செய்து பார்க்க முடியும். மேலும் STBயில் மைக்ரோ எஸ்டி கார்டுகளை பொருத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.