புதுடெல்லி:
இந்தியாவில் தற்போது பெட்ரோல்-டீசல் விலை மாதம் இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. இனி தினந்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சோதனை முயற்சியாக 5 நகரங்களில் மே 1-ம் தேதி முதல் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறுகையில், “வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்று, பெட்ரோலியப் பொருட்களின் விலையை தினந்தோறும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் செய்யவில்லை. மத்திய அரசு தலையிடாது.
சோதனை அடிப்படையில் 5 நகரங்களில் நாள்தோறும் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்பின்னர், நாட்டின் பிற பகுதிகளில் நடைமுறைப்படுத்துவதா, வேண்டாமா? என்பதை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்யும்” என்றார்.