Business Technology

டிஜிட்டல் பரிவர்த்தனை ஹெல்ப் லைன் விரைவில் அறிமுகம்

டிஜிட்டல் பரிவரத்தனை தொடர்பான உதவிக்காக தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் புதிய ஹெல்ப் லென் அறிவிக்கப்படவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. நாடு முழுவுதும் டிஜிட்டல் பரிவர்த்தனை 8,800 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் வரும் புகார்கள், சந்தேகங்கள் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய புதிய உதவி எண்ணை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிக்கவிருக்கிறது. 14442 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை தேசிய பேமெண்ட் கார்பரேஷனுக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது.

இதன் மூலம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்களை போக்கிக்கொள்ளவும் பண பரிவர்த்தனையில் ஏற்படும் தவறுகளின்போது பணத்தை திரும்பப்பெறுவதற்கான உதவியைப் பெறவும் இந்த எண்ணுக்கு அழைக்கலாம்.

இதனை பயன்படுத்துவதற்கா வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு வருவதால், விரைவில் இந்த உதவி எண் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

ஏற்கெனவே, டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த 14444 என்ற எண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.