Business Science

சீன பொறியியலாளர்களால் புதிய வகை எரிபொருள் கண்டுபிடிப்பு!

உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கை வாயுவாகக் காணப்படும் குறித்த வாயு தென் சீனக் கடற்பகுதியில் காணப்படுகின்றது. இது குறித்த கடந்த வருடமே சீன அரசு அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டிருந்தது.

அதாவது எரியக்கூடிய பனிக்கட்டி என அழைக்கப்படும் மீத்தேன் ஹைட்ரேட் வாயு புவியியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.

எனினும் தற்போதுதான் பொறியியலாளர்களால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாயுவானது பனிக்கட்டி போன்று கவர்ச்சிகரமான தோற்றத்தினை கொண்டிருப்பதனாலேயே எரியும் பனிக்கட்டி (Flammable Ice) என அழைக்கப்படுகின்றது.

இயற்கை சுவட்டு எரிபொருளாகக் காணப்படும் இவ்வாயு எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பது தொடர்பான விளக்கப்படும் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாயுவைக் கண்டறிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளும் பல மில்லியன் டொலர்களை முதலீடு செய்திருந்தது.

எனினும் சீனா வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.