Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

மே 9ம் தேதி ரிலீஸ்: ‘இந்த முறையாவது வெளியாகுமா வாலு’

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாலு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார்.

சந்தானம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் போது சிம்பு, ஹன்சிகா காதல் பிரச்னைகளால் சிறிது காலம் படப்பிடிப்பு முடிவடையாமல் நின்றது. படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வந்ததாகவும், தயாரிப்பாளரிடம் சிறு பிரச்னை என்றும் செய்திகள் வெளியாகின.

அதன்பிறகு பிரச்னைகள் எல்லாம் சுமூகமாக முடிந்து படப்பிடிப்பை தொடங்கினர். இறுதியாக படப்பிடிப்பை முடித்து, பாடல்கள், டிரைலர்கள் மற்றும் வீடியோ பாடல்கள் என வெளியிட்டுவிட்டார்கள். படம் மட்டும் வெளி வரவில்லை. வாலு 2012ல் படம் தொடங்கப்பட்ட நாள் முதலே தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு தீபாவளி கடந்தும் படம் மட்டும் வந்தபாடில்லை.

அதன் பிறகும் ரிலீஸுக்கு பல தேதிகள் குறிக்கப்பட்டும் படம் அந்த தேதியில் வெளியாகவில்லை. இந்நிலையில் வாலு திரைப்படம் தற்போது மே 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, இந்த முறையாவது குறித்த தேதியில் படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றாமல் இருப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Exit mobile version