Cinema

பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்

அதைத் தொடர்ந்து இப்படத்தில் அஜித்தின் ஒவ்வொரு புகைப்படத்தையும் அப்படத்தின் இயக்குனர் சிவா வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் நேற்று இரவு விவேகம் படத்தில் உள்ள அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டார். அதில், அஜித் கட்டுமஸ்தான உடம்புடன், ரொம்பவும் அழகான தோற்றத்துடன் கையில் ஒரு தற்காப்பு ஆயுதத்தை ஏந்தியபடி நடந்துவருவதுபோல் அமைந்திருந்தது.

இந்த புகைப்படத்தை பார்த்ததும் அவரது ரசிகர்கள் ரொம்பவும் குதூகலமாகியுள்ளனர். படத்தின் டீசர், டிரைலர், ஆடியோ என எதுவும் வெளியாகாத நிலையில், புகைப்படத்தை பார்த்தே இப்படத்தை பார்க்கும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரபல கதாசிரியரும், பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து, அஜித்தின் இந்த தோற்றத்தை பார்த்து புகழ்ந்துள்ளார். அவர் கூறும்போது, “உடலினை உறுதி செய் – உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே போன்ற பொன்மொழிகளுக்கு தல அஜித் அவர்கள் நவீன உதாரணம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.