Home » சங்கமித்ராவில் சங்கமிக்கும் தேசிய விருது வென்றவர்.!
Cinema

சங்கமித்ராவில் சங்கமிக்கும் தேசிய விருது வென்றவர்.!

சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள சங்கமித்ரா திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக திரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 24 திரைப்படத்துக்கு தேசிய விருது வாங்கிய இவர் விரைவில் சங்கமித்ரா படப்பிடிப்பில் இணையவுள்ளார். அருணாச்சலம், அரண்மனை உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை இயக்கிய சுந்தர்.சி அடுத்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சங்கமித்ரா திரைப்படத்தை இயக்கவுள்ளார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் பாலிவுட் ஒளிப்பதிவாளர் சுனில் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்யவிருந்தார். சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ படத்தின் வேலைகள் இருப்பதால் அவர் விலகியுள்ள நிலையில் ஒளிப்பதிவாளர் திருவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இவர் ஹேராம், ஆளவந்தான், 24 உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட  64-வது தேசிய விருதுகளில் 24 படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.