Home » ‘இளைய தளபதியின் வசனத்திற்கு என்றும் அடிமை’- அனிருத்!! ஆதாரம் உள்ளே..
Cinema Entertainment Tamil

‘இளைய தளபதியின் வசனத்திற்கு என்றும் அடிமை’- அனிருத்!! ஆதாரம் உள்ளே..

‘கொலைவெறி’ பாடல் மூலம் உலகளவில் ஹிட்டான அனிருத் ’3′, ‘எதிர் நீச்சல்’, ‘வேலையில்ல பட்டதாரி’ போன்ற படங்களின் தொடர் வெற்றியால் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். இந்நிலையில் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி படம் மூலம் அனைவரின் பாராட்டை பெற்ற அனிருத் தற்போது அஜித் – சிவா கூட்டணி இணையும் தல#56 படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘துப்பாக்கி’, ’கத்தி’ படங்களில் விஜய் பேசும் டையலாக்கான “ ஐ அம் வெயிட்டிங்” வசனத்திற்கு அனிருத் நடிப்பது போல வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ட்விட்டில் இந்த வசனத்திற்கு நான் அடிமை என்று கூறியுள்ளார் அனிருத்.