நல்ல நடிகர், RJ என்பதை தாண்டி நல்ல மனிதர் இந்த பாலாஜி. இவர் பல சமூக நல்ல பணிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் பேட்டியளித்துள்ளார்.
இதில் இவர் பேசுகையில் ‘இளைஞர்கள் சென்னையில் வெள்ள நிவாரணப்பணிகள் மேற்க்கொண்ட போது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஆனால், பலரும் வாக்களிக்க வராதது வருத்தமளித்தாலும், அவர்களுக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்று குழப்பத்தில் இருந்தனர்.
மேலும், சமீபத்தில் நடந்த சுவாதி கொலையில் தடுக்க ஆள் இல்லை என்றாலும் கூட, 3 மணி நேரம் அந்த பெண்ணிற்காக ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது தான் கஷ்டமாக உள்ளது’ என கூறியுள்ளார்