Home » டேப்லெட்டை விஞ்சும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள பிரேஸ்லெட்!
Entertainment World

டேப்லெட்டை விஞ்சும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள பிரேஸ்லெட்!

லண்டன்: தற்போது சிறிய வளையல் அளவிலான ஒரு நவீன பிரேஸ்லெட்டில் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) தொழில்நுட்பத்தை தொடுதோல் (டச் ஸ்கின்) தொழில்நுட்பமாக ஒரு நிறுவனம் சுருக்கி விட்டது. சீக்ரெட் பிரேஸ்லெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணம் நமது மணிக்கட்டில் தொடுதிரையின் பிம்பத்தை வெளிக்கொணரும். ஸ்மார்ட் போனில் தோன்றுவது போலவே அனைத்து ’ஐகான்’களும் உங்களது மணிகட்டில் தெளிவாக தோன்றும். ஸ்மார்ட்போனினை பயன்படுத்துவது போல தொடுதிரையை தேர்வு செய்யலாம்.

மேலும் இதன்மூலம் வெப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். வீடியோ எடுக்க முடியும். வாட்ஸ்அப்பில் வந்த படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை படிக்கலாம். விரல்களை விரித்து திரையின் அளவை தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். முழுக்க தண்ணீரில் மூழ்கியிருக்கும் நிலையிலும் இந்த சீக்ரெட் பிரேஸ்லெட் பழுதாகாது.

உங்கள் பிரேஸ்லெட்டில் உள்ள ஒரு ‘பிக்கோ ப்ரொஜெக்டர்’ மூலம் உங்கள் கரத்தின் முழங்கை பகுதியில் பாய்ச்சப்பட்டு, (மணிக்கட்டு) திரையில் தோன்றும் ‘கமாண்ட்’ பொத்தான்களின் மூலம் நீங்கள் இடும் கட்டளைகள் மீண்டும் பிரேஸ்லெட்டில் உள்ள ‘ப்ராஸெஸருக்கு’ அனுப்பப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவை அத்தனையும் செயலாற்றுகின்றது.

உங்கள் கை மணிக்கட்டுக்கும், கட்டளையிடும் விரலுக்கும் இடையே பாயும் லேசர் கதிர்களின் வாயிலாக விரும்பும் வகையில் இது செயல்படும். நீடித்த பேட்டரி மற்றும் கண்ணைக் கவரும் வண்ணங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சீக்ரெட் பிரேஸ்லெட்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.