Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

மிகவும் விரும்பப்படும் நடிகை:முதலிடத்தை பிடித்த எமி ஜாக்சன் !!!! ஸ்ருதி-நயன்தாரா-த்ரிஷா பின்னடைவு !!!

பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகர், நடிகைகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் மிகவும் விரும்பப்படும் நடிகர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில், நடிகர் அஜித் குமார் முதலிடத்தை பிடித்தார். தற்போது, மிகவும் விரும்பப்படும் நடிகை பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதில், ‘மதராசபட்டணம்’, ‘ஐ’ உள்ளிட்ட படங்களில் நடித்த இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ஐ’ படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. படத்தில் இவரது நடிப்பும் பரவலாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, இவருக்கு படவாய்ப்புகளும் குவியத்தொடங்கியுள்ளது. சென்ற வருடம் இந்த பட்டியலில் எமி ஜாக்சன் 3 இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version