Home » வாயில் பிளாஸ்திரியுடன் பொல்லார்ட் கேளிக்கை !!!!
Entertainment Sports

வாயில் பிளாஸ்திரியுடன் பொல்லார்ட் கேளிக்கை !!!!

பெங்களூர் அணி 2வது பேட்டிங் செய்த போது அதிரடி வீரர் கிறிஸ் கெயில் தடுமாறினார். 3வது ஓவரின் போது மும்பை வீரர் பொல்லார்ட் அவரின் அருகில் சென்று சில வார்த்தைகளை பேசி சீண்டினார். இதனால் பொல்லார்ட்டை அழைத்து அம்பயர் கண்டித்தார். அப்போது தான் எதுவும் பேசவில்லை என மறுத்த பொல்லார்ட், அந்த ஓவர் முடிந்த உடன் பெவிலியனுக்கு ஓடிச் சென்று வாயில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு மைதானத்திற்கு வந்தார். மைதானத்தில் பிரமாண்ட திரையில் இதனை காண்பித்தபோது ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் சிரித்தனர். கெயில் ஆட்டம் இழந்து வெளியேறிய பின்னர் தான் பிளாஸ்திரியை எடுத்தார்.