அஜித்தின் வேதாளம் படமும் கமல் ஹாசனின் தூங்காவனம் திரைப்படமும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் வெளியானது. இதில் வேதாளம் திரைப்படம் தமிழகம் முழுவதும் முதல்நாளில் ரூ. 15.5 கோடியை வசூல் செய்திருந்தது. அதேசமயம் கமலின் தூங்காவனம் திரைப்படம் முதல்நாளில் தமிழகம் முழுவதும் ரூ. 4 கோடியை வசூல் செய்திருந்தது.
ஆனால் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ நிலவரத்தை பொறுத்தவரை முதல் இரண்டு நாட்களில் கமலின் தூங்காவனம் திரைப்படம் வேதாளம் படத்தை விட அதிகம் வசூல் செய்து அசத்தியுள்ளது. வேதாளம் திரைப்படம் அமெரிக்காவில் முதல் இரண்டு நாட்களில் ரூ. 1.1 கோடியையும் தூங்காவனம் திரைப்படம் ரூ. 1.4 கோடியையும் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.