Cinema Entertainment

அஜித்துக்கு ஆறாவது இடமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

image

தமிழ்ப் படங்களை வாங்கி வெளிநாடுகளில் வெளியிடும் நிறுவனம் – ஐங்கரன் இண்டர்நேஷ்னல். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந்தத்துறையில் நம்பர் ஒன்னாக விளங்கும் இந்த நிறுவனம் அஜித்தை வைத்து ஏகன் என்ற படத்தைக் கூட தயாரித்து கையை சுட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐங்கரன் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு தகவல் படத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

image

முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு வெளிநாட்டு உரிமை எவ்வளவு என்ற தகவலை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. ரஜினி நடித்த படங்களின் வெளிநாட்டு உரிமை 30 கோடி ரூபாய்க்கு விலைபோவதால் முதலிடத்தில் இருக்கிறார் ரஜினி. ரஜினிக்கு அடுத்த இடத்தில், அதாவது இரண்டாவது இடத்தில் விஜய் இருக்கிறார். இவர் நடித்த படங்கள் 22 கோடி ரூபாய்க்கு விலைபோகிறதாம்.

விஜய்க்கு அடுத்த இடத்தை அதாவது 3 ஆவது இடத்தைப் பிடித்திருப்பவர் சூர்யா. இவர் படங்கள் 20 கோடிவரை வியாபாரமாகிறது. சூர்யாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் கமல்ஹாஸன் இருக்கும் கமல் நடித்த படங்கள் 15 கோடி ரூபாய்க்கு விலைபோகிறதாம். சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு 10 கோடிக்கு வியாபாராம் இருப்பதால் அவருக்கு இந்தப்பட்டியலில் 5 ஆவது இடம்.

சிவகார்த்திகேயனுக்கு அடுத்த இடத்தில்தான் அதாவது ஆறாவது இடத்தில்தான் அஜித் இருக்கிறார். அஜித் நடித்த படங்களின் வெளிநாட்டு உரிமை வெறும் 8 கோடி ரூபாய்க்குத்தான் விலைபோகிறதாம். விக்ரம் நடித்த படத்துக்கு 7 கோடிவரை வியாபாரம் உள்ளதால் அவர் 7ஆவது இடத்தில் இருக்கிறார். சிம்பு நடித்த படத்துக்கு அதிகபட்சமாக 6 கோடி ரூபாய் வியாபாரம். எனவே 8 ஆவது இடத்தில் இருக்கிறார்.

ஐங்கரன் வெளியிட்ட இந்த தகவலை வைத்து சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை செமத்தியாய் நக்கல் அடித்து வருகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அஜித் ரசிகர்களுக்கு தலைகுனிவும் ஏற்பட்டுள்ளது.
Overseas

image

Actors rights:

#Rajini – 30cr
#Vijay – 22cr
#Suriya – 20cr
#Kamal – 15cr
#Siva – 10cr
#Ajith – 8cr
#Vikram – 7cr
#Simbu – 6cr