இளையதளபதி விஜய் நடித்துள்ள “புலி” படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வரும் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என இயக்குனர் சிம்புதேவன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். உடனே டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் விஜய்யின் புலி படம் குறித்த ஹேஷ்டேக் உருவாகி அதனை இந்திய அளவில் விஜய் ரசிகர்கள் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்.
புலி டீசர் அறிவிப்பு வருவதற்கு முன்னரே சிம்பு நடிக்கும் ‘கான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் அறிவிப்பு வெளியானது. அதன்பின் புலி பற்றிய அறிவிப்பு 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்க பட்டதால் உடனடியாக களத்தில் இறங்கிய அஜீத் ரசிகர்கள் சிம்புவுக்கு ஆதரவாக செயல்பட்டு ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். சிம்பு அஜீத்தின் வெறித்தனமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
புலி பற்றிய அறிவிப்பு 6 மணிக்கு வெளியானவுடன் விஜய் ரசிகர்கள் தங்களுக்கு ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி பட்டையை கிளப்பினர். ஒரு கட்டத்தில் கான் படத்தின் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் 5 வது இடத்தில் இருந்தது. அதன் பின் தாக்குபிடிக்க முடியாமல் சட்டென 9வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். விஜய் ரசிகர்கள் முன்னேறி டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தனர்.
நேற்று இரவு 12 வரை புலி படத்திற்கு 50k டுவீட்டுகள கிடைத்தன. ஆனால் கான் படத்திற்கு 25k டுவீட்டுகள மட்டுமே கிடைத்தன.
விஜய் ரசிகர்களின் இந்த எழுச்சி மற்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.