சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலம் கடல் கடந்தும் உள்ளது. இந்நிலையில் மலேசியாவில் தற்போது கபாலி படத்தில் இவர் பிஸியாக நடித்து வருகிறார்.
இருப்பினும் ஓய்வு நேரங்களில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இதில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ரசிகை ஒருவர் ரஜினியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை அறிந்த ரஜினி உடனே அவரை சந்தித்து சில மணி நேரம் பேசியுள்ளார். இதனால், அந்த நபர் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம்