Entertainment Sports

உலக கோப்பை 2015 இல் ஒரு காமெடி ….. கிளிக் செய்க ….

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற ஜாம்பவான் அணிகளுடன் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளும் பங்கேற்றன. இதில் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் அணியின் கேப்டன் முகமது தாகிர் பிப்ரவரி 19-ந் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ரசிகர்களை சிரிப்பு மழையால் நனைத்தார்.

போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக முதல் பேட்டிங் செய்யவிருக்கும் அணியை, ‘டாஸ்’ முறைப்படி தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த போட்டியிலும் அப்படி நடந்தது. ஜிம்பாப்வேயின் கேப்டன் சிகும்பரே நாணயத்தை சுண்டி விட்டார். நாணயம் தரையில் விழுவதற்குள்ளாக அதனை ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் அணியின் கேப்டன் முகமது தாகிர் கையில் பிடித்து முழித்துக் கொண்டிருந்தார். இதனை மைதானத்தில் இருந்த ரசிகர்களும், நடுவர்களும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தனது தவறை உணர்ந்த முகமது தாகிர், தன் செயலுக்காக நடுவர்களிடம் மன்னிப்பு கேட்டார். மேலும், ‘டாஸ் போடும் போது தான் கவனிக்கவில்லை’ என்றும் பதிலளித்தார். ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் அணியின் கேப்டனின் இந்த செயலால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் டாஸ் போடப்பட்டது.