Entertainment Sports

டிவில்லியர்ஸ்- இன் ஹிந்தி காதல்…!!!!

தென்ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் பெயரைச் சொன்னால் தூங்கிக் கொண்டிருக்கும் பந்துவீச்சாளர்கள் கூட திடுக்கிட்டு எழுவார்கள். தனது மட்டை விளாசலால் எதிரணிகளை கிடுகிடுக்க வைப்பவர். மைதானத்தின் எந்தப் பகுதிக்கும் பந்தை விரட்டக்கூடிய இவரை ‘மிஸ்டர் 360’ என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.

டி வில்லியர்ஸ் கிரிக்கெட் அன்றி, விளையாட்டுலகின் ‘ஆல் ரவுண்டர்’ என்றே சொல்லலாம். ஆம், கிரிக்கெட் தவிர, கால்பந்து, ரக்பி, டென்னிஸ், பேட்மிண்டன் என்று பல விளையாட்டுத் திறமை கொண்டவர் இவர். அதுவும் சாதாரணத் திறமை இல்லை, தேசிய அணியில் இடம்பெறும் அளவு திறமை. படிப்பிலும் இவர் கில்லாடியாம்.
இப்படி டி வில்லியர்ஸ் விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் என்றால், சமீபத்தில் இவரது புதிய திறமை ஒன்றும் வெளிப்பட்டிருக்கிறது.

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அந்தத் திறமை, இவரது இந்தி பாடல் பாடும் திறன்.

பிரபல இந்தி பாடலான ‘யே தோஸ்த்தி ஹம் நகின் சோடேங்கே…’யை அழகாக ராகம் இழுத்துப் பாடுகிறார் இவர்.

இந்தியாவில் ஐ.பி.எல். போட்டி களில் ஆடியதால் இந்தியாவும், இந்தி மொழியும் டி வில்லியர்ஸ§க்கு பிடித்த விஷயங்களாகி விட்டன.

தனக்குப் பிடித்த இந்தி நடிகர் ஷாருக்கான் என்று கூறும் டி வில்லியர்ஸ§க்கு, இந்தி சரளமாகப் பேச முடியவில்லை என்று வருத்தம்.

ஆனால் ஷாருக்குடன் இணைந்து ‘யே தோஸ்த்தி ஹம் நகின் சோடேங்கே’ என்ற பாடலை பாடிய தருணத்தை மறக்க முடியாது என்று கூறுகிறார்.

அதோடு அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளை அழகாகப் பாடிக் காட்டவும் செய்கிறார்.

இது தான் அவருடைய அழகான மறுபக்கம்!