Cinema Entertainment Tamil World

‘நண்பன்’ பட பாணியில் பிரசவம்: ஐ-போன் ‘ஃபேஸ்டைம்’ வீடியோ மூலம் பெண்ணிற்கு குவா.. குவா…

நியூஜெர்சி: நண்பன் படத்தில் கதாநாயகியின் அக்கா ஒரு இக்கட்டான சூழலில் பிரசவ வலியில் துடிக்க, மருத்துவரும் நாயகியுமான இலியானா கணினி இணைய இணைப்பில் வெப் கேமரா மூலம் ‘லைவ்’ ஆக வழிமுறைகள் சொல்ல, அதைப் பின்பற்றி விஜய் பிரசவம் பார்ப்பார். குழந்தை பிறந்த உடன் தியேட்டரில் விசில் பறக்கும். சினிமாவில் பார்த்து ரசித்த இந்த காட்சியைப் போல அமெரிக்காவில் நிஜத்தில் நடந்துள்ளது. நியூஜெர்ஸியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ரிவேரா, அந்த மாதத்திற்கான பரிசோதனைக்காக தான் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் அவரது நேரம் சரியில்லையோ என்னவோ ரிவேராவின் டாக்டர் மேனா டெவல்லா வேறொரு மருத்துவமனையில் இருக்க, எதிர்பாராத விதமாக ரிவேராவுக்கு பனிக்குடம் உடைந்தது.
வலியில் துடிக்க ஆரம்பித்தார் ரிவேரா. மருத்துவமனையில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்திருந்த மெடிக்கல் அசிஸ்டன்ட் ஆஸ்வைடா டாரஸ், இதற்கு முன் தனியாகப் பிரசவம் பார்த்த அனுபவம் இல்லாதவர் என்பதால் பதறிப்போனார். உடனே மருத்துவர் மேனாவுக்கு விஷயத்தைத் தெரிவிக்க, அவரோ உடனடியாக வரமுடியாத சூழலில் சிக்கியிருந்தார். ரிவேராவின் வலியும் வேதனையும் அதிகரித்தது. டாக்டரும் மெடிக்கல் அசிஸ்டன்ட்டும் செய்வதறியாமல் தவிக்க, சட்டென ஒரு ஐடியா உதித்தது ரிவேராவின் கணவருக்கு. ஐ போன் ஃபேஸ்டைம் வீடியோ தன்னுடைய ஐ-போனில் உள்ள ‘ஃபேஸ்டைம்’ வீடியோ மெசேஜிங் ஆப் மூலமாக பிரசவ அறையில் இருக்கும் ரிவேராவை டாக்டர் பார்க்கச் செய்ய, சுகப் பிரசவத்திற்கு செய்ய வேண்டியவற்றை டாக்டர் ஐ-போன் மூலமாக மெடிக்கல் அசிஸ் டென்ட்டுக்கு ஆலோசனை கூறினார். ஆண்குழந்தை பிரசவம் இந்த முயற்சி சாத்தியமாகுமா என்று ரிவேராவுக்கு வலியுடன் சேர்ந்து பயமும் பிடித்துகொண்டது. ஆனாலும் கடவுள் கைவிடவில்லை கிட்டத்தட்ட 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு ரிவேராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வாட் அன் ஐடியா இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற என் மூளையில் சட்டென வெட்டியது, இந்த ஐ-போன் ஐடியா.’ பரவசமாகிறார் ரிவேராவின் கணவர். ஆச்சரிய அனுபவம் ‘யோசிக்க நேரமில்லாத சூழலில், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வீடியோ மெசேஜிங் மூலமாக என் மெடிக்கல் அசிஸ்டன்ட்டுக்கு கைடு செய்தேன். இது எனக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஆச்சர்யமான அனுபவம்!’ என்று இன்னமும் நம்ப முடியாத திகைப்பு மேலிட சொல்கிறார், மருத்துவர் மேனா. எல்லாம் ஒரு பாடம்தான் ‘இவ்வளவு பிராக்டிக்கலாக, பொறுப்பாக மருத்துவப் பாடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது!’- பெருமூச்சு விடுகிறார் மெடிக்கல் அசிஸ்டன்ட் டாரஸ். தாங்க்ஸ் டெக்னாலஜி நடந்த விசயம் எதுவும் தெரியாமல் ‘குவா குவா!’ சத்தத்துடன் டெக்னாலஜிக்கு நன்றி சொல்லி வருகிறது குட்டிக் குழந்தை.