சூர்யா நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் மாஸ். ஆனால், இனி இப்படத்தின் டைட்டில் மாஸ் இல்லையாம். நேற்று, தணிக்கை குழு கேட்டதற்கு இனங்க மாஸ் என்கின்ற மாஸிலாமணி என்று டைட்டிலை மாற்றினர்.இதில் மாஸ் என்பதன் டாக் லைனாக ‘என்கின்ற மாஸிலாமணி’ இருந்தது. தற்போது தலைப்பிலேயே ‘மாஸு’ என்று மாற்றப்பட்டுள்ளது.இன்றைக்கு வந்த நாளிதழ் விளம்பரங்களில் இந்த பெயரில் தான் தலைப்பு வந்துள்ளது. இச்செய்தி ரசிகர்கள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மாஸ் என்ற பெயரில் தான் ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.