தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் என்ற ‘Shivajirao Gaikwad’க்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் மிக உயரிய விருதான ‘மகாராஷ்டிரா ரத்னா’ விருது வழங்கவேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏ அணில் கோட் கோரிக்கை வைத்துள்ளார்.
ரஜினியை ‘மண்ணின் மைந்தன்’ என குறிப்பிட்டுள்ள அவர், ரஜினியும் பூர்வீகம் மகாராஷ்டிராவில் உள்ள கோலாபுர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாரத ரத்னா விருத்திற்காக ரஜினியின் பெயரை பரிந்துரைக்கும்படி மகாராஷ்டிர அரசை கேட்டுக்கொண்டுள்ளார்