தமிழ் சினிமா நடிகர்களில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அதிலும் விஜய்யின் நடனத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை.அந்த வகையில் இவர் வில்லு படத்தில் நடிகை குஷ்புவுடன் இணைந்து ஆடியிருப்பார். அந்த புகைப்படங்களை இன்று குஷ்பு தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதில் ‘நான் இதுநாள் வரை ஞாயிறு அன்று சினிமா சம்மந்தப்பட்ட வேலைகளை செய்ததே இல்லை, ஆனால், விஜய் மற்றும் பிரபுதேவாவிற்காக மட்டும் தான் ஞாயிறு அன்று கூட நடனமாட சம்மதித்தேன்’ என்று டுவிட் செய்துள்ளார்.#விஜய்