அவற்றுக்கு மூளையோ இதயமோ இல்லை; ஆனால் அவற்றைப் பார்க்க நேர்ந்தாலே நம்மில் பலருக்கு கடலில் கால்வைக்கவே பயம் ஏற்படும். அவை ஜெல்லிமீன்கள்.
அத்தகைய மூவாயிரம் ரக ஜெல்லிமீன்களின் மிகப்பெரிய கண்காட்சி ஒன்று லண்டனில் நடக்கிறது.
கடுமையாக கொட்டும் ஜெல்லிமீன்கள் முதல் கைகளில் பிடித்து விளையாடத்தக்க ஜெல்லிமீன்கள் வரை சுமார் மூவாயிரம் ஜெல்லிமீன்கள் இங்கே உயிரோடு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி, அழகான அதேசமயம் மர்மமான நீர்வாழ் உயிரினம் குறித்த புரிதலை மேம்படுத்த முயல்கிறது.
இதற்காக 2.5 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருப்பது வியக்கவைக்கலாம். ஆனால் இதில் ஆராய்ச்சி நடக்கிறது.
ஐநூறு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் வாழ்ந்துவரும் அபூர்வ விலங்கினம் ஜெல்லி மீன்கள்.
கடலில் வாழும் மற்ற உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துவரும் வேளையில் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
டைனசோர் காலத்துக்கு முன்பிலிருந்தே பூமியில் வாழும் இவை, மற்ற எல்லா உயிரிகளின் காலத்தையும் கடந்து வாழக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.