Entertainment HealthTips

போதை விட சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்களே அதிகம்: ஆய்வில் தகவல்

போதைக்கு அடிமையாவதை விட சமூக வலைதளங்களுக்கு இளைஞர்கள் எளிதாக அடிமையாகின்றனர் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

பேஸ்புக், டுவிட்டர், ஸ்நேப்சாட், இன்ஸ்டாகிராம் , யூடியூப்,ஆகிய சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களிடம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 14 -24 வயதுக்குள் உள்ள 1500 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில்,” மது உள்ளிட்ட போதை பழக்களுக்கு அடிமையாவதை விட சமூக வ்லைதளங்களுக்கு இவர்கள் எளிதில் அடிமையாகி விடுகிறார்கள். தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்கள், ஒருவித மன உளைச்சல், கவலை, தனிமை உள்ளிட்ட மனநோய் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சமூகவலைளதங்களில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதில், இன்ஸ்டாகிராம் முதல் இடத்தில் உள்ளது. அதிகமான அளவில் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்துபவர்கள், அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்குஅடுத்த இடத்தில், ஸ்நாப்சேட் உள்ளது என்று அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது