இதையடுத்து தமிழ் கலாச்சாரத்தின் மீது தனக்கு பெரிய ஈர்ப்பு ஏற்பட்டிருப்பதால் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக கூறியிருந்தார். இதற்காக தமிழ் பேச தான் பயிற்சி எடுத்து வருவதாகவும் ரித்திகா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக, ரித்திகா நடித்துள்ள `சிவலிங்கா’ படம் வருகிற ஏப்ரல் 14-ல் ரிலீசாகிறது. மேலும் `இறுதிச்சுற்று’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான `குரு’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இப்படமும் விரைவில் ரிலீசாகிறது.
அடுத்து செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் இணைந்து `வணங்காமுடி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் ரித்திகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனுஷ்கா கதாநாயகியாக நடிக்க உள்ள அப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ரித்திகா நடிக்க உள்ளாராம். இப்படத்தில் ரித்திகாவுக்கு செமயான ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.