`சிறுத்தை’ சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் படம் `விவேகம்’. `வீரம்’, `வேதாளம்’ படத்திற்கு பின்னர் சிவாவுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல்கேரியாவின் பிரபல ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான `விவேகம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் சிவா தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழச்சியில் மாணவர்கள் கேள்விக்கு சில ஸ்வாரஸ்யமான தகவல்களை தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது,
`விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பல்கேரியா செல்ல உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக அஜித் நடித்த `வேதாளம்’ படத்தின் டீசரை மட்டுமே வெளியிட்டோம்.
`விவேகம்’ படத்தில் இரண்டு மாறுபட்ட வேடத்தில் அஜித் நடித்துள்ளதாக சிவா கூறினார். ஆனால் `விவேகம்’ படத்தில் அஜித்தின் ஒரு வேடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், மற்றொரு வேடத்தின் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என்றார். மேலும் சரியான இடைவெளியில் `விவேகம்’ படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்றும் சிவா கூறினார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதால் தல ரசிகர்கள் விரும்பும் வகையில் படத்தின் திரைக்கதைக்காக மிகவும் மெனக்கிட்டதாக சிவா தெரிவித்தார். மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் கட்டுக்கோப்பான உடல் விஎப்எக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதாக வந்த தகவலை மறுத்த சிவா, அந்த உடற்கட்டுக்காக அஜித் கடுமையாக உழைத்ததாக தெரிவித்தார்.
`விவேகம்’ படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.