சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான `கபாலி’ படத்தை தொடர்ந்து, அஜித் நடித்து வரும் `விவேகம்’ படத்திற்கும் அதே போல் புரமோஷன் செய்யப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
மேலும் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று `கபாலி’ படத்தில் ரஜினி கோட்டுடன் நிற்கும்படியான பொம்மை ஒன்றை செய்து விற்பனை செய்தது. இவ்வாறு சுமார் 40,000 பொம்மைகள் விற்பனையானதாக அந்த நிறுவனம் சார்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், `விவேகம்’ படத்தில் அஜித்தின் சிக்ஸ்பேக் பொம்மை தற்போது தயாராகி வருகிறது. முன்னதாக, இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அஜித் சிக்ஸ் பேக்குடன் கோபமாக நிற்கும் படி வெளியான போஸ்டர் மாதிரியான பொம்மைகளை அஜித் ரசிகர் ஒருவர் செய்துள்ளார். மதுரையை சேர்ந்த இளைஞர் உருவாக்கி உள்ள இந்த பொம்மை விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
`விவேகம்’ படத்தில் அஜித்துடன் இணைந்து காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.