Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

Gauva for health நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொய்யாப்பழம்

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொய்யாப்பழம்:-

வாழைப் பழத்திற்கு அடுத்த படியாக நம்மிடையே பிரபலமானது கொய்யா தான். இதன் அருமை தெரிந்தோ, தெரியாமலோ நாம் இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால் மிகவும் அக்கறையோடு உட்கொள்வோம்.

* கொய்யாவில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம். வைட்டமின் ‘சி’ சத்து உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது.

* கொய்யாவில் உள்ள காப்பர் சத்து ஹார்மோன்கள் சுரப்பதற்கும், செயல்படுவதற்கும் வெகுவாய் உதவுகின்றது. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டிற்கு குறிப்பாக தைராய்டு சுரப்பி செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றது.

* புற்று நோய் அபாயத்தை கொய்யா வெகுவாய் குறைக்கின்றது. கொய்யாவில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்தும், லைகோபேனும் திசுக்களை பாதுகாப்பதால் புற்று நோய் தாக்கும் அபாயம் வெகுவாய் குறைகின்றது.

* சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.

* கண் பார்வை சிறக்க கொய்யாப்பழமும் சிறந்ததாகும்.

* இதில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொய்யாபழம் உண்ண அறிவுறுத்தப்படுகின்றது. இது குழந்தையின் நரம்பு மண்டலத்தினை நன்கு பாதுகாக்கின்றது.

* ரத்த அழுத்தத்தை சீராய் வைக்கின்றது. ரத்த உற்பத்தியைக் கூட்டுகிறது.

* கொய்யாப்பழம் உண்டால் இதில் உள்ள ‘மக்னீசியம்’ நரம்புகளையும், தசைகளையும் தளர்த்தி விடுவதால் மனச் சோர்வு குறையும்.

* கொய்யாவில் உள்ள நியாசின் எனப்படும் வைட்டமின் பி3, பிரிடாக்ஸின் எனப்படும் வைட்டமின் பி6 மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு செல்ல உதவுவதால் மூளை சோர்வின்றி இருக்கும்.

* இதில் உள்ள வைட்டமின் சி, ஏ மற்றும் லைகோபேன், கரோட்டின் போன்றவை சரும சுருக்கங்களை நீக்குவதால் முதுமைத் தோற்றம் தள்ளிப் போகின்றது.

* கொய்யா கழிவுப் பொருட்களை நீக்கி குடல் சுத்தமாய் வைக்கும். எந்த ஒரு பழத்தையும் பழமாய் சாப்பிடுவதே நல்லது. சில வகை சமையல் குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. காயோ, பழமோ, சமைக்கும் பொருளோ நன்கு கழுவிய பிறகே அதை பயன்படுத்த வேண்டும். வெள்ளை, சிகப்பு இருவகை கொய்யாப்பழங்களுமே சிறந்ததுதான்.

கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள் :

1 கப் கொய்யாப்பழம் சுமார் – 165 கிராம் கலோரி சத்து 112 கொழுப்பு சத்து – 2 சதவீதம்
கொலஸ்டிரால் – 0 சதவீதம்
உப்பு – 0 சதவீதம்
மாவுச்சத்து – 8 சதவீதம்
நார்சத்து – 36 சதவீதம்
புரதம் 4 கிராம்
வைட்டமின் ஏ – 21 சதவீதம்
வைட்டமின் சி – 628 சதவீதம்
கால்சியம் – 3 சதவீதம்
இரும்பு சத்து – 2 சதவீதம்

வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது.

Exit mobile version