HealthTips

மாட்டுக்கறியுடன் – கீரைத் தண்டுகள் மோத வேண்டாம்!

பசு மாட்டிறைச்சிக்குத் தடை என்பது மேம்போக்கில் சாதாரணமாக சிலருக்குத் தோன்றலாம்; ஆனால் இந்துத்துவாவாதிகளின் கைகளில் கிடைத்த அரசியல் ஆயுதம் இது. இந்து – முஸ்லீம் – கிறித்தவர் என்று பேதம் பிரித்து, அதில் குளிர் காய நினைக்கும் சூட்சமும் இதற்குள் சுருண்டு கிடக்கிறது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை சமுதாய மக்கள் வீதிக்கு வந்தால், பசுவைப் புனிதம் என்று கூறி இந்துக்களை எதிர் வரிசையில் நிறுத்தி, மோதவிடச் செய்து அதில் அரசியல் லாப ரத்தம் குடிக்கலாம் என்பது ஆர்.எஸ்.எஸின்கீழ் இயங்குகிற பிஜேபி அரசின் நுட்பமான அரசியல்.

1857இல் வெள்ளைக்காரர்களை எதிர்த்து நடத்தப்பட்ட கலவரத்திற்குச் சிப்பாய்க் கலகம் என்று பெயர் சூட்டி னார்கள், அதில் உள்ளது என்ன என்றால் பசுவின் கொழுப் பைத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களைப் பயன்படுத்தச் சொல்லுகிறார்கள் என்று இந்து ராணுவத்தினரிடமும், பன்றி கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களைக் கொடுத்துள்ளனர் என்று முசுலிம்களிடையே பரப்பி இந்திய சிப்பாய்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளப்பி விட்டனர்.

இது மதக் கலவரமே தவிர, சிப்பாய்க் கலகம் அல்ல என்று மக்கள் மத்தியில் போட்டு உடைத்துக் காட்டியவர் தந்தை பெரியாரே! அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

விக்டோரியா மகாராணி சாசனம் என்று கூறி இந்தியாவில் நிலவும் மதப் பிரச்சினைகளில் வெள்ளை அரசாங்கம் தலையிடாது என்று விக்டோரியா மகாராணி பிரகடனம் செய்ததை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இப்பொழுது அதே தந்திரத்தை வேறு வகையில் செய்கிறார்கள். இந்துக்களின் புனித தெய்வமான பசுவை வெட்டுவதா? என்று விதண்டாவாதம் செய்கிறார்கள்.

உணவுப் பழக்க வழக்கம் என்பது ஒருவனின் தனி மனித உரிமை எங்கள் வீட்டில் என்ன குழம்பு வைப்பது என்பதை இராம கோபாலன்களைக் கேட்டா முடிவு செய்ய முடியும்!

அப்படியே பார்க்கப் போனாலும் பார்ப்பனர்கள் ஒட்டு மொத்தமாக சைவப் பட்சிணிகளா? வங்காளத்துப் பார்ப் பனர்களுக்கு மீன் இல்லாமல் ஓருருண்டை சோறுகூட தொண்டைக்குள் போகாதே!

மீன் என்று சொல்லாமல் ஜல புஷ்பம் என்று சொல்லிக் கொள்வார்கள்.

19 ஆண்டு காலமாக குடியரசு மாளிகையில் கிடப்பில் கிடந்த மகா ராட்டிர மாநில மசோதாவுக்கான ஒப்புதல் – இப்பொழுது பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக இருக்கும் பொழுது உயிர்ப் பெற்று எழுந்தது எப்படி? இதற்குள்ளிருக்கும் அரசியல் (இந்துத்துவா) என்ன என்ற கேள்வி எழத்தானே செய்யும்?

2012ஆம் ஆண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப் பட்ட மாட்டிறைச்சி 36.4 லட்சம் டன், அதில் உள்நாட்டில் உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டது. 19.6 லட்சம் டன், மீதி மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியாவின் கருவூலத்தில் அந்நியச் செலாவணியாக வந்து சேர்ந்தது – இவற்றை எல்லாம் இந்த அரசு நிராகரிக்கப் போகிறதா? மதச் சார்பற்ற அரசு என்றால் மதத்துக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்று தானே பொருள். அப்படி இருக்கும்போது ஒருவரின் உணவுப் பிரச்சினையில் மத மூக்கை நுழைப்பது அத்துமீறலும், அடாவடித்தனமும், சட்டமீறலும் ஆகாதா?

உலக நாடுகளை எடுத்துக் கொண்டாலும் வெகு மக்களால் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு மாட்டுக் கறி தானே – மறுக்க முடியுமா?

ஏன் இந்தியாவை எடுத்துக் கொண்டாலும் வெகு மக்களால் அதிகம் சாப்பிடக் கூடிய விலை மலிவான சத்து நிறைந்த உணவு மாட்டுக் கறி தானே!

சந்தேகத்துக்குரிய மூன்று சதவீத உயர் ஜாதி மக்களின் உணவுக் கலாச்சாரத்தை 97 சதவீத மக்களிடத்திலே திணிப்பது அராஜகம் அல்லாமல் வேறு என்னவாம்?

மாட்டுக்கறி சாப்பிடும் 97 சதவீத மக்களும் ஒன்று திரண்டு தங்களுடைய தோள் வலிமையைக் காட்டினால் மூன்று சதவீத கீரைத் தண்டுகளின் நிலை என்ன?

வேறு எந்த உணவிலும் கிடைக்காத சத்துகள் மாட்டுக் கறியில் கிடைக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை களாகும். 85 கிராம் மாட்டுக் கறியில் 179 கலோரிகள் தான் இருக்கின்றன.

ஆனால், அந்த 85 கிராம் மாட்டுக் கறியில் கிடைக்கக் கூடிய உயிர்ச் சத்துக்களோ பத்து சதவீதத்திற்கு மேலாகும். உடல் எடையைக் குறைப்பதற்கும் உரிய உணவும் இந்த உணவே! புரதம், ஸிங்கு (துத்தநாதம்), மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், கோபல்ட், குரோமியம், நிக்கல், செல்னியம், இரும்பு, வைட்டமின் டி, வைட்டமின் இ,மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மாட்டிறைச்சியில் மிகுந்துள்ளன என்பது மருத்துவ ரீதியான தகவல்களாகும். பசு புனிதம் என்பது போன்ற புராணக் கூத்தல்ல.

நமது தசைகள், பற்கள், எலும்புகள் வலுவாகின்றன. உடலின் செல்களுக்குப் பிராண வாயுவையும் சக்தியையும் அளிக்கின்றன. பி. வைட்டமின்களான தையமின், ரைபோப்ஃபேவின் பேன்டோனிக் ஆசிடுஃபோலேட், நியாசின் மற்றும் வைட்டமின் பி சத்துக்களும் சிகப்பு இறைச்சிகளில் மிகுந்து காணப்படுகின்றன. வளர் பரு வத்தில் உள்ள இருபால் குழந்தைகளுக்கும் மாட்டிறைச்சி மகத்தானது.

மாட்டுக்கறியில் உள்ள ஸ்டீரிக் ஆசிடு நல்ல கொழுப்பை (கொலஸ்ட்ரால் HDL) அதிகரிக்கச் செய்கிறது! நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. பாதிக்கும் மேற்பட்ட மாட்டுக் கொழுப்பில் இதயத்திற்குத் தேவையான ஓலிக் ஆசிட்கள் நிரம்பியுள்ளன.

மாட்டுக்கறியில் உள்ள அடர்த்தியான கொழுப்பை வெட்டி அகற்றிவிடவும் முடியும். அதைத்தான் லீன்பீப் (Lean Beef) என்று சொல்லுகிறோம். சிவப்பு இறைச்சிகளில் மட்டும் கிடைக்கும் கார்டினன் என்ற சத்து இதயத்தை சீராக இயங்க வைக்கிறது.

எல்லாவற்றையும்விட 51 சதவீத புரோட்டின் சக்தி மாட்டுக்கறியல்லாமல் வேறு எதிலிருந்து கிடைக்கிறதாம்? இந்தக் கீரைத் தண்டுகளின் உளறலை. சட்டத்தை மதிக்கப் போகிறவர்கள் யார்? சட்டம் மரியாதை இழந்து போவ தைப் பார்க்கத்தானே போகிறோம்!

அதே நேரத்தில் உணவின் பெயரால் மேற்கொள்ளப்படும் பார்ப்பனீயக் கலாச்சாரத்தை கவனிக்கவும் தவறக் கூடாது.