HealthTips

கோடை தாகத்தை தணிக்க ஏற்றது மண் பானை தண்ணீர்

 சென்னை:

கோடையில் வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் தாகம் அதிகரிக்கும். தாகத்தை தணிக்க குடிநீர், குளிர்பானம், இளநீர் என பல இருந்தாலும் மண் பானை தண்ணீருக்கு நிகரே கிடையாது.

பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும்.

அந்தக் காலத்தில் வழிப்போக்கர்களுக்குக்கூட தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து மண்பானைகளில் குளிர்ந்த தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது.

திருவிழாக் காலங்களில் நீர்மோரும் பானகமும் மண்பானைகளில் வைத்து வழங்கப்பட்டன.

மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த இது இன்று மீண்டும் புழக்கத்திற்கு வரத் தொடங்கியுள்ளது.

இன்று நகரங்களில்கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது.

சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்… மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன்.

நீரில் இருக்கும் சில தாதுக்களை நம்பி நம் உடல் உறுப்புகள் உள்ளன. அந்த தாதுக்கள் கிடைக்காவில்லை என்றால் அவற்றின் செயல் திறன் பாதிக்கப்படும்.

நீங்கள் சதுரகிரி அல்லது வேறு ஏதாவது மலைப்பகுதி சென்று அங்கிருக்கும் நீரை பருகி பாருங்கள் எதுவும் செய்யாது. ஒரு வேளை சாதாரண நீரை அருந்தி தொண்டைகட்டினாலோ அல்லது சளிபிடித்தாலோ நல்லது தான். அந்த நீர் உங்கள் உடம்பில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றுகிறது. பின்னர் பழகி விடும்.

மினரல் வாட்டரில் கிருமியும் இல்லை. தாதுவும் இல்லை. சிறுநீரகத்தின் வேலையே நாம் குடிக்கும் தண்ணீரை சுத்தப்படுத்தி தேவையான தாதுக்களை எடுத்துகொண்டு மற்றவற்றை வெளியேற்றுவதுதான். கேன் தண்ணீர் குடிப்பதால் நீங்கள் அந்த வேலையை நிறுத்திவிட்டீர்கள். பிறகு சிறுநீரகம் அது என்ன செய்யும்..?

வாய்வைத்து நீரை குடியுங்கள். நீரை மெதுவாக, வாயில் கொஞ்சம் வைத்திருந்து குடியுங்கள். உங்க உமிழ்சேர்ந்தால் இன்னும் நல்லது. இடது கையால் குடியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக நீரை உள்ளே அனுப்புங்கள். நீரை எப்படி வடிகட்டுவது?. மண்பானை வாங்குங்கள். முதல் நாள் இரவு அதில் தண்ணீரை ஊற்றுங்கள். மறுநாள் அதை சாதாரண பானைக்கு மாற்றிவிடுங்கள்.(குளிர் வேண்டுமென்றால் அப்படியே குடிக்கலாம்) 6 மணி நேரத்திற்கு மேல் மண்பானையில் இருக்கும் நீரில் கிருமிகள் வெளியேற்றப்படும். ஆனால் தாதுக்கள் வெளியேறாது.

மண்பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.

எனவே உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் மண்பானைதான்.

தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும். பிராண சக்தி அதிகரிக்கும்.

இதை அறிந்தவர்கள் மண் பானைகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னையில் தற்போது மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது.