சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கரு வளையம் இருக்கும். இது அவர்களை வயதானவர் போல காட்டும்.
தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
சரியான தூக்கம் இல்லாத காரணத்தால், கண்களில் கரு வளையம் தோன்றும்.
இதை நீக்க எளிய வழிகள் பார்க்கலாம்:
வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை ஊற்ற வேண்டும். அரை மணி நேரம் அப்படியே இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் இப்படி செய்தால் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
* வெள்ளரிச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்தால் கரு வளையம் படிப்படியாக மறையத்துவங்கும்.
இப்படி செய்தால் கருப்பு வளையம் நீங்கி கண்கள் அழகாகவும், முகம் பார்க்க கவர்ச்சியாகவும் இருக்கும்.