Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கழுத்து வலிக்கும் நிவாரணம் தரும் மத்ச்யாசனம் (மச்சாசனம்)

கழுத்துவலி, முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் மச்சாசனதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செய்முறை :

பத்மாசன நிலையில் அமர்ந்துகொண்டு இரண்டு கைகளையும் பின்னால் கொண்டுபோய் முழங்கைகளைத் தரையில் ஊன்றி லேசாக உச்சந்தலையால் தரையைத்தொட்டு உடலை மேல்நோக்கி வளைத்து, கையால் அந்தந்தப் பக்கத்து கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும்.

பத்து வினாடிகள் இயல்பான சுவாசத்தில் இருந்து ஆசனத்தைக் கலைக்கவும். இதன்படியே கால்களை மாற்றிப்போட்டு செய்ய வேண்டும். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம்.

அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கழுத்துப்பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது. வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ சாயாமல் சரியாக உச்சந்தலை தரையில் வைக்கப்பட வேண்டும்.

பயன்கள் :

கண், காது, மூக்கு, வாய், மூளை பகுதிகளுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைப்பதால் அவை நன்கு சீராக இயங்கும்.

தொண்டைச் சதை (டான்சில்) நீங்கும். கழுத்துவலி நீங்கும். நல்ல நினைவாற்றல் பெருகும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

ஆஸ்துமா நீங்குவதுடன் நாள்பட்ட மார்புச்சளி நீங்கவும் இது மிகவும் சிறப்பான ஆசனமாகும்.

நீரிழிவு, நுரையீரல் நோய்கள், தைராய்டு, பாரா தைராய்டு முதலியவை சரியாகும்.

உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். மேனிக்கு மெருகூட்டும். இவ்வாசனம் பிராண சக்தியை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது.

வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் இவ்வாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

Exit mobile version