HealthTips

ஒரே பிளாஸ்டிக் பாட்டிலை நீண்ட நாள் பயன்படுத்தினால் நோய்கள் வரும்!

மீண்டும் மீண்டும் ஒரே பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்துவதால், உடல்நலம் பாதிக்கப்படுவது உறுதி, என ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிக்கனம் மற்றும் தரத்தைப் பற்றி கவலைப்படாமல், சிலர் ஒரே பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது வழக்கம். குடிநீர் வைத்துக் கொள்ளவே, இவ்விதம் பலரும் அதிகளவில் ஒரே பிளாஸ்டிக் பாட்டிலை தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், இவ்வாறு குடிநீர் பருக ஒரே பிளாஸ்டிக் பாட்டிலை நீண்ட நாள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி, தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

அந்த ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டிகளில் அதிகளவு பாக்டீரியா தங்குவது வழக்கமாக உள்ளதென்றும், இதனால், நமக்கு கொடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்திய உடனே அப்புறப்படுத்துவதே நல்லது. அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால், கழிவறையைவிட அதிகளவு பாக்டீரியா அதில் தங்க நேரிடுகிறது. குறிப்பாக, பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள வேதிப்பொருள் பிஸ்பீனால், நமது செக்ஸ் திறனை வெகுவாகப் பாதிக்கிறது.

இதுமட்டுமின்றி, நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு, மார்பக புற்றுநோய், இதய நோய் மற்றும் பிறப்புறப்பில் குறைபாடு எனப் பலவகை நோய்களை, பிளாஸ்டிக் பாட்டில்கள் ஏற்படுத்துவதாகவும், ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.