Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

கருத்தரிப்பதை தடுக்க பல உபகரணங்கள் இருக்கின்றன. ஆனால், யாவும் உதவாத நிலையில் தம்பதிகள் தேர்ந்தெடுப்பது கருத்தடை மாத்திரைகள். கருத்தடை மாத்திரைகள் மற்றவையுடன் ஒப்பிடுகையில் கருத்தரிப்பை தடுக்க பயனளிக்கும் என்றாலும் கூட, அதனால் பெண்களுக்கு நிறைய பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதில் இருந்து, அதன் பிறகு எப்போது கருத்தரிக்க முயலலாம் என்பது வரையிலான தகவல்கள் பற்றி காணலாம்.

பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக கருத்தரிக்காமல் இருக்க, கருத்தரிப்பை தடுக்க தம்பதிகள் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்கின்றனர். அல்லது வேறு கருத்தடை கருவிகள் / உபகரணங்கள் பயனளிக்கவில்லை என்ற காரணத்தாலும் பலர் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள முனைகின்றனர்.

மகப்பேறு மருத்துவர்கள், தம்பதிகள் அவர்களது வாழ்நாளிலேயே ஓரிரு முறை தான் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். அதுவும் மருத்துவர் பரிந்துரை பேரில். தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வது, பிறகு நீங்களே நினைத்தலும் கருத்தரிக்க முடியாத நிலைக்கு எடுத்து செல்லும் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் மகப்பேறு மருத்துவர்கள் குறைந்தபட்சம் ஒரு குழந்தையாவது இருக்கும் நபர்களுக்கு தான் கருத்தடை மாத்திரைகளை பரிந்துரை செய்கின்றனர்.

கருத்தடை மாத்திரை உட்கொண்ட பிறகு, சரியான மாதவிடாய் சுழற்சி அமையும் போது கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருத்தடை மாத்திரை காரணமாக சிலருக்கு ஓரிரு மாதங்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் உண்டாகலாம். எனவே தான் தம்பதிகள் கருத்தடை மாத்திரை உட்கொண்ட பிறகு சரியான மாதவிடாய் சுழற்சி ஏற்பட்ட பிறகு கருத்தரிக்க முயல்வது சரி என கூறுகின்றனர். இல்லையேல் கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

யாராக இருப்பினும் தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வது சரியானது அல்ல. எனவே, இதை தவிர்ப்பது தான் சரி என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு கருத்தடை மாத்திரை உட்கொண்டும் கூட கருத்தரிக்க வாய்ப்புண்டு. இதனால் பக்கவிளைவுகள் வருமா என அஞ்ச வேண்டாம். அப்படி எதுவும் நடக்க வாய்ப்புகள் இல்லை என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனார்.

Exit mobile version