History

பூடான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்: ஏப்.5- 1964

 பூடானில் 1952 முதல் பிரதமராக இருந்தவர் ஜிக்மி டோர்ஜி. இவர் 1964-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1804 – முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்காட்லாந்தில் பதிவானது. * 1879 – பொலிவியா மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது. * 1897 – கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது. * 1930 – மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார். * 1936 – மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர்.

* 1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. * 1944 – இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜெர்மனியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். * 1945 – பனிப்போர்: யோகொஸ்லாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.