இந்திய சினிமாவில் தற்போது தென்னிந்தியா சினிமா அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தென்னிந்தியாவில் எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் பாலிவுட்டில் டப் செய்யபடுகிறது. பல தென்னிந்திய இயக்குனர்கள் பாலிவுட் படங்களை இயக்குகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் இணையத்தளம் ஒன்று தென்னிந்திய நடிகர்களை குறி வைத்து கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. அந்த இணையத்தளம் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தியது.
இதில் விஜய், அஜித், பவன் கல்யாண், ரவிதேஜா, மம்முட்டி, மோகன் லால், ரஜினி, கமல் என பலரும் இருக்க, தற்போது வரை முதலிடத்திற்கு விஜய், அஜித் இருவருக்குமிடையே தான் கடும் போட்டி.
இந்த கருத்து கணிப்பின் முடிவு வெளியிடபட்டு உள்ளது. இதில் அஜித் 51.27 சதவீத ஓட்டுகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.நடிகர் விஜய் 39.69 சதவீத ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.மீதி உள்ள 9 சதவீதத்தை தான் பவன கல்யாண்,மகேஷ்பாபு,ரஜினிகாந்த் ,மம்முட்டி,புனித் ராஜ்குமார், கமல்ஹாசன்,மோகன்லால் ரவி தேஜா ஆகியோர் பெற்று உள்ளனர்