கேரளாவில், மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த நயன்தாராவை ‘ஐயா’ படத்தில், சரத்குமார் ஜோடியாக டைரக்டர் ஹரி அறிமுகம் செய்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் பட உலகின் பிரபல கதாநாயகியாக உயர்ந்தார். ‘வல்லவன்’ படத்தில் நடித்தபோது இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் நெருக்கமாக பழகினார்கள். இந்த காதல், சில மாதங்களிலேயே முறிந்து போனது.
அதையடுத்து, நயன்தாரா பிரபுதேவாவுடன் காதல் வளர்த்தார். பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தன் கையில் பச்சை குத்திக் கொண்டார். கிறிஸ்தவரான அவர், பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக, இந்து மதத்துக்கு மாறினார். இருவரும் திருமணம் வரை நெருங்கினார்கள்.
கடைசி நேரத்தில், இந்த காதலும் தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு காரணமாக நயன்தாராவும், பிரபுதேவாவும் பிரிந்து விட்டார்கள். அதன்பிறகு, பிரபுதேவா இந்தி படங்களை டைரக்டு செய்வதற்காக மும்பையில் குடியேறினார். நயன்தாரா தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்தினார்.
அவர், விஜய் சேதுபதி ஜோடியாக ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் ஒப்பந்தமானார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் டைரக்டு செய்தார். இவர், சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தை டைரக்டு செய்தவர். சிம்புவின் நெருக்கமான நண்பர்களில் இவரும் ஒருவர். நயன்தாரா-சிம்பு இடையே காதலில் ஊடல் ஏற்பட்ட போதெல்லாம் இருவருக்கும் இடையே தூது போனவர், விக்னேஷ் சிவன்தான்.
காதலுக்கு தூதுவராக இருந்த இவரே இப்போது நயன்தாராவின் காதலராக மாறியிருக்கிறார்.
நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்து வந்தார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை இயக்குகிறார். இவர் இவருக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சு நிலவி வந்தது.விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கார் பரிசளித்தார். அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அங்-குள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. இந்த தகவலை இரண்டு பேரும் மறுத்தார்கள். இருவரும் நண்பர்களாக பழகி வருவதாக கூறினர்.
‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பட குழுவினர் செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். நட்சத்திரங்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் நெருக்கமாக நின்று ஜோடியாக செல்பி எடுத்துக்கொண்டனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒரு கேரவனுக்குள் நெருக்கமாக இருப்பது போன்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம், இணையதளத்தில் பரவி வருகிறது.
இருவரும் மலையாளி என்பதால் இந்த காதல் வெற்றி பெறும் என கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. வழக்கமாக நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. ஆனால் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் அப்போது திருமண அறிவிப்பை நயன்தாரா வெளியிடலாம் எனவும் கூறப்படுகிறது.