>சிம்பு-நயன்தாராவை இணைத்து பாண்டிராஜ் இயக்கி வரும் படம் இது நம்ம ஆளு. இந்த படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரே தயாரித்து வருகிறார். அவரது தம்பி குறளரசன் இசையமைக்கிறார். சிம்பு நடித்து வந்த வேட்டை மன்னன், வாலு போன்ற படங்கள் தாமதமாகிக்கொண்டு வந்ததால், அவசரகதியில் தயாரித்து வெளியிட வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட இப்படமும் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கிக்கிடக்கிறது.ஏற்கனவே பலமுறை பைனான்ஸ் பிரச்சினை ஏற்பட்டு ஒவ்வொரு முறையும் மாதக்கணக்கில் இடைவெளி விடப்பட்டு வந்ததால், ஒருகட்டத்தில் சூர்யாவின் 2டி நிறுவனத்துக்காக ஹைகூ என்றொரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார் பாண்டிராஜ். சூர்யா-அமலாபால் இருவரும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அப்பட வேலைகளில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில், இது நம்ம ஆளு படத்தை இயக்கி முடிக்காமலேயே வேறு பட வேலைகளில் பாண்டிராஜ் ஈடுபட்டிருப்பதாக தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் அதற்கு, படப்பிடிப்புக்கு தேவையான பைனான்ஸ் தயாராக இருந்தால் படத்தை இயக்க எப்போது வேண்டுமானாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று பதில கொடுத்துள்ளாராம் பாண்டிராஜ்.