Flash HealthTips Images Indians medicine Tamil

எதிர் விளைவை ஏற்படுத்தும் ஆன்டிபயாட்டிக்ஸ்…!!!

ஆண்டிபயாடிக் மருந்துகள் சாதாரணமாக பரிந்துரைக்கப்படும் மருந்து. இது உடனடியாக நோய் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் 50% தேவை இல்லாத ஆண்டிபயாடிக் மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறது.

மக்கள் பொதுவாக பாக்டீரியா, வைரஸ் குறித்த வித்தியாசங்களை தெரிந்து கொள்வதும் இல்லை விருப்பப் படுவதும் இல்லை.

வேகமான நம் வாழ்க்கையில் ஏற்படும் உடல் பிரட்சணை அதாவது காய்ச்சல்
என்றாலே சிலர் ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகளை சாப்பிடும் வழக்கத்தில் இருக்கிறோம்.

இந்த மாத்திரை நமக்கு தற்காலிகமாக நோயில் இருந்து பாதுகாக்கிறது. தொடர்ந்தோ அடிக்கடி நாம் இந்த மாத்திரையை உட்க்கொள்வதால் உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ப்ராய்லர் கோழிகளுக்கு கூட நோய் எதிர்ப்பிற்காக இல்லை அவை குண்டாவதற்காக (risk of obesity) இவை குறிப்பிட்ட அளவில் தீவணத்துடன் சேர்த்து கொடுக்கப் படுவதாக சொல்கிறார்கள்., அப்படியானால் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளும் மனிதனுக்கும் ஓபிசிடி என்று சொல்லப் படுகிற உடற்பருமன் ஏற்படும் வாய்ப்பும் உண்டே.
ஆன்டிபயாடிக்குகள் நம் உடலில் உள்ள பயன் தரும் பாக்டீரியாக்களையும் கொல்கிறது.

இந்த பயன் தரும் பாக்டீரியாவனது நம் உடலின் குடல் வாலில் இருக்கிறது.
நம் உடலின் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மழுங்கடிக்கிறது.

சிறுவர், சிறுமியருக்கு அந்த வயதில் இருந்தே இந்த மருந்தை உட்கொள்வது கண்டிப்பாக அவர்களின் இன்சுலின் சுரப்பை பாதிப்படைய செயவதாக சொல்கிறார்கள். !! இது முதல் கட்ட சக்கரை நோய்.

H. pylori பைலோரி என்று ஒருவகை பாக்டீரியா ஆஸ்துமாவில் இருந்து நம்மை பாதுகாப்பது.

தொடர்ந்து வழக்கமாக நாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட் கொள்ளும் போது நம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும் வாய்ப்பும் உண்டு