Cinema education Flash Images Tamil

முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார், மகேஷ்பாபு

தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்   களில் ஒருவரான மகேஷ்பாபு முதன்முதலாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘பிரமோற்சவம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதில், மகேஷ்பாபுவின் ஜோடியாக ரகுல் பிரீத்சிங், பிரணிதா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். சத்யராஜ் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். ரத்னவேல் ஒளிப்   பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.

பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை பி.வி.பி. நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிறுவனம் ஏற்கனவே நாகார்ஜுன்-கார்த்தி இணைந்து நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. கேரளாவில் வெற்றி பெற்ற ‘பெங்களூர் டேஸ்’ படத்தை தெலுங்கில் தயாரிக்கிறது. ஆர்யா-அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாரித்து வருகிறது.